அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தடுப்பூசி தொடர்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இன்னும் முடிவு எடுக்காத சூழ்நிலையில், இங்கிலாந்து அரசு தடுப்பூசி போட ஒப்புதல் அளித்துள்ளது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சுமார் 150 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. […]
