பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது . இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது . இதில் தொடக்க வீரரான ரிஸ்வான் பொறுமையுடன் விளையாடி 76 ரன்களை குவித்து […]
