உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் போது பைவ்ஸ்கா என்ற 53 வயது பெண்மணி உக்ரைன் நாட்டிற்கு உதவுவதற்காக இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இந்நிலையில் மரியுபோலில் உள்ள ஒரு திரையரங்கில் வெடிகுண்டு தாக்குதல் நடந்த போது அங்குள்ள பொது மக்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக பைவ்ஸ்கா சென்றார். அப்போது ரஷ்ய ராணுவ வீரர்களால் பைவ்ஸ்கா கைது செய்யப்பட்டு 3 மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார். […]
