ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஓஎஸ் 06 செயற்கைக்கோள் உட்பட சில செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவி இருந்தது. இதில் இஓஎஸ் 06 என்பது ஓசன் சாட் வகை செயற்கைக்கோளில் 6-வது தலைமுறையை சார்ந்ததாகும். இந்த செயற்கைக்கோள் 1117 கிலோ எடை கொண்டதாகும். இது கடல் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்ற செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கு வதற்காக அனுப்பப்பட்டது. […]
