நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி பேசினார். அப்போது, கடந்த சில நாட்களாக முதலமைச்சர் பழனிசாமி தி.மு.க மீதும், தி.மு.க தலைவர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறி விவாதத்துக்கு அழைத்து வருகிறார். விவாதம் குறித்து கடந்த வாரம் முதலமைச்சருக்கு நான் எழுதிய மடலுக்கு இதுவரை பதிலில்லை. சர்க்காரியா, 2ஜி போன்ற நிரூபணமற்ற, நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டை முதலமைச்சர் தொடர்ந்து கூறி வருகிறார். அ.தி.மு.க தலைவி ஜனநாயகத்தை படுகொலை […]
