ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக விளையாடிய நடராஜன், வர்ணனையாளரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்ததோடு, தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அற்புதமாக பந்துவீசி வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நடராஜன் இந்திய அணி டி20 தொடரை வெல்ல பெரிதளவில் கை கொடுத்துள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பவுலிங் யூனியனில் புதிய நட்சத்திரமாக நடராஜன் இடம்பிடித்துள்ளார். மூன்றாவது டி20 ஆட்டத்திற்கு பிறகு […]
