அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி அதிர்ச்சி தோல்வியடைந்தார் . கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, தரவரிசையில் 43-வது இடத்திலுள்ள அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்ஸை எதிர்கொண்டார் .இதில் முதல் இரண்டு செட்களையும் இருவரும் தலா ஒன்று […]
