மராட்டியத்தின் உயர்ந்த விருது பழம்பெரும் பின்னணிப் பாடகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் சாதனையாளர்களுக்கு ஆண்டு தோறும் மராட்டிய பூஷன் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருது விழா இன்று வரை வெகு விமர்சையாக நடந்து வருகிறது. விருதுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான மராட்டிய பூஷன் விருது புகழ்பெற்ற பின்னணி பாடகியான ஆஷா போஸ்லேவுக்கு வழங்கப்பட உள்ளது. […]
