தமிழகத்தில் நெகிழிப்பொருள்கள் தடை உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீா்ப்பை மறு ஆய்வு மேற்கொள்ள கோரிய வழக்குகள், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா போன்றோர் அடங்கிய அமா்வில் விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கில் உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையா் தரப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் “உணவுப் பாதுகாப்பு விதிகளில் ஆவின்பால் மற்றும் அதுசார்ந்த பொருள்களை கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப் பைகள், அலுமினியம் பாயில்களில் அடைத்து விற்க அனுமதிக்கிறது. ஆகவே ஆவின் நிறுவனம் நெகிழிப்பைகளை பயன்படுத்துகிறது. குடிநீா் […]
