ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் மானியத்துடன் ஆவின் பாலகம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆவின் பாலகம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மின் வாகனம், உரைவிப்பான்,குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து மூன்று லட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியமாக 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆவின் நிறுவனத்துடன் ஒப்பந்த […]
