தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று ஆவின் பால் விலை குறைப்பு. தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தவுடன் ஸ்டாலின் ஆவின் பால் விலை குறைப்பு அரசாணையில் கையெழுத்திட்டார். ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் அனைத்து வகை ஆவின் […]
