ஆவணி பிறந்தால் ஆயிரம் நன்மைகள் வரும் என்பது நம் சான்றோர் கூற்று. தமிழ் மாதங்களில் ஆவணி ஐந்தாம் மாதமாக உள்ளது. கேரளத்தில் இதுவே முதல் மாதமாகும். சிம்ம மாதமாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த மாதத்தில்தான் கணநாதர், கண்ணபிரான் அவதாரங்கள் நடைபெற்றன. மாணிக்கவாசகருக்கு இறைவன் குதிரைகளை கொண்டுவந்து மதுரையம்பதியில் ஒப்படைத்த ஆவணி மூல விழாவும் நடைபெற்றது. இந்த நாளில் திருமலை திருப்பதியில் உற்சவரான மலையப்பசுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திரு சேவை சாதிப்பார். ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், […]
