திண்டுக்கல்லில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 3/4 கோடி சட்டமன்றத் தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 24 நிலையான கூர்ந்தாய்வுக்குழுக்கள், 32 பறக்கும் படைகள், 16 வீடியோக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுவினர் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக […]
