கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் சென்ற 2 மாதங்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் குரங்கு நீர் வீழ்ச்சியில் நேற்று 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு போக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது. இதேபோன்று பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததனால் அங்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து ஆழியாறு அணையிலிருந்து நேற்று 3வது நாளாக உபரி நீர் திறந்துவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு […]
