கவிஞர் கண்ணதாசனின் 96வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்தவர் கண்ணதாசன். […]
