300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிவம் என்ற 2 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் பெற்றோர் கூலி வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 25 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டதால் இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. […]
