ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சபாநாயகருக்கு திருப்பியனுப்பியது தொடர்பில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தை அதிமுக புறக்கணித்திருக்கிறது. வருடந்தோறும் இந்திய அளவில் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தருமாறு கோரிக்கை வைத்து, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் அனுமதிக்காக அந்த மசோதாவை அனுப்பியிருந்த நிலையில், அவர் மீண்டும் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். இதனால், தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பில், அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி […]
