மருத்துவப்பபடிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் மனசாட்சி படி முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதை இந்த கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் சில […]
