Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஆளுநர் மாளிகை ஒப்புதல்’…. டிச.14ல் சம்பவம்…!!!

சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின் டிச.14ம் தேதி அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 15ஆம் தேதி மார்கழி தொடங்குவதால் அவசரமாக பணிகள் நடக்கிறதாம். தலைமை செயலகத்தில் அவருக்கான அறையும் தயாராகியுள்ளது. இந்நிலையில் அவர் பொறுப்பேற்க இருக்கும் இலாக்காக்கள், பொறுப்பேற்பு தேதி, மற்ற அமைச்சர்களின் இலாகா மாற்றம் அடங்கிய செய்திக் குறிப்பு நாளை வெளியாக இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசிற்கு எதிராக செயல்படுகிறார்…. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி…. 30 பேர் கைது…!!!!!

ஆளுநர்  மாளிகையை  முற்றுகையிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக அரசிற்கு எதிராக செயல்படுவதாக ஆளுநர்ஆர்.என்.ரவியை கண்டித்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக புரட்சிகர இளைஞர் முன்னணி அறிவித்துள்ளது. அதன்படி அந்த அமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு மசோதா…. ஆளுநர் மாளிகையில் ஒப்படைப்பு….!!!!

கடந்த வருடம் செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வை விலக்குவதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 1-ஆம் தேதி நீட் விலக்கு மசோதா பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி திருப்பி அனுப்பினார். இதையடுத்து இந்த பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக கடந்த 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டபேரவை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பதவி ஏற்பு விழா…. ஆளுநர் மாளிகையில் ஏற்பாடுகள் மும்முரம்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா…. ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடைசி நேரத்தில் சர்சை…! வசமாக சிக்கிய ஆளுநர்.. புதுவையில் பரபரப்பு …!!

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய வட மாநில ஊழியர்களை கடைசி நேரத்தில் பணி நிரந்தரம் செய்து துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்த போது அரசு துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் நற்பெயர் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்தனர். இதனால் ஆளுநர் மாளிகையில் அதிக செலவு ஏற்படுவதாகவும், அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.இதனால் பல ஊழியர்கள் அவர்களது […]

Categories
மாநில செய்திகள்

“வருஷா வருஷம் நடக்கும்… ஆனா இந்த வருஷம் இல்லை”… ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ரத்து..!!

ஆண்டு தோறும் ஆளுநர் மாளிகையில், குடியரசு தினத்தன்று அளிக்கப்படும் தேநீர் விருந்து இம்முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் உள்ள கடற்கரையில் நடக்கும் குடியரசு தின விழாவில், ஆளுநர் தேசியக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். அன்று மாலை, ஆளுநர் மாளிகையில், முக்கிய பிரமுகர்களுக்கு, ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பார். இதில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு கொரோனா காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேஸ் போடுவீங்கன்னு பயமா…! எங்களுக்கா ? துணிச்சலான திமுக… மிரள போகும் அதிமுக …!!

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்திலும் திமுக மகளிரணி நாளை கண்டன பேரணி நடத்த இருக்கின்றது உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம் பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையை எரித்து, அடக்கம் செய்த நிகழ்வு அனைவரையும் அதிர வைத்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி காவல்துறையினரால் தடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி!

இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்திக்க உள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. இந்த […]

Categories

Tech |