நாடு முழுவதும் நேற்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர்கள் 20 பேருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருதுகளை வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், என்னை போன்றவர்கள் இந்த மேடையில் நிற்க ஆசிரியர்கள் தான் காரணம். வீட்டில் எங்களுக்கு கிடைத்த அனுபவம், பயிற்சி மிகக் குறைவு. முழுமையாக ஆசிரியர்களால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். எனவே ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு என்றுமே நன்றி சொல்வது தவறு கிடையாது மாணவர்களின் மனதையும், ஆசிரியர்களின் மனதையும் நன்கு அறிவேன். […]
