தமிழக ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கூட்டணி கட்சிகள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழக அரசை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்து பேசியிருந்தார். இதனால் திமுக அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஆளுநர்களே எரிமலையோடு விளையாடதீர்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. இதில் தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநருக்கும் இருக்கும் பிரச்சனையில் தமிழிசை அவரது பாணியில் மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள […]
