நியூயார்க்கின் அதிக பனிப்பொழிவினால் நகர ஆளுநர் மக்களுக்கு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் நகரின் ஆளுநரான கியூமோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த பனி புயலானது அசாதாரணமானது. மேலும் இது பிற்பகலில் மிகவும் ஆபத்தானதாக மாறலாம். மேலும் மிக அபாயகரமான நிலையில் சாலைகள் இருக்கிறது. […]
