பாகிஸ்தான் ஆளுங்கட்சியின் பெண் தலைவரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில், “பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்” என்ற ஆளும் கட்சியின் தலைவராக இருக்கும் லைலா பர்வீன், தன் முன்னாள் கணவர் மற்றும் வழக்கறிஞரான ஹஸ்னைன் போலியான செக்கை தனக்கு கொடுத்ததாக அவர் மீது வழக்கு தொடர்ந்தார். சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இருக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான விசாரணை நடைபெற்று வந்தது. எனவே, நீதிமன்றத்தில் ஆஜராக லைலா பர்வின் அவரது சகோதரருடன் […]
