ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மார்ச் 14, 1879 ஆண்டு பிறந்தவர். அறிவியல் உலகில் எண்ணற்ற விஞ்ஞானிகள் தோன்றியிருந்தாலும் அவர்களில் முதன்மையானவராக, ‘அறிவாளி’ என்பதற்கு உதாரணமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் அடையாளப்படுத்தப்படுகிறார். இளமைக்காலத்தில், மற்ற விஞ்ஞானிகளைப் போல ஆராய்ச்சிக்கூடங்களில் பணியாற்ற வாய்ப்பின்றி, எண்ண ஓட்டங்களிலேயே ஆராய்ச்சி செய்து வழிக் கண்டவர். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான அறிவியல் அறிஞர். அவரது சார்பியல் கோட்பாடு, இயற்பியலில் புதிய கோணத்திற்கு கொண்டு சென்றது. அதுவரை கோலாச்சியிருந்த ஐசக் நியூட்டனின் கோட்பாடுகளில் புதைந்திருந்த முரண்பாடுகளைத் தகர்த்தெடுத்து […]
