தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 30) நடைபெற உள்ளது. இதில், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆறு கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறாவது கட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 31) முடிவடைகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி […]
