கடன் தொல்லையால் வெல்லம் ஆலை அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலத்தை அடுத்துள்ள நெட்டையம்பாளையம் பகுதியில் சதீஷ் (வயது 31) என்பவர் வசித்து வந்துள்ளார். வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வரும் இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்ற சதீஷ் நீண்டநேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்கு […]
