வேதாரண்யத்தில் அரியவகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது இயற்கை ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அரிய வகையான ஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரையோர பகுதிகளுக்கு வந்து குழி தோண்டி முட்டையிட்டு செல்லும். இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகளின் ஆயுட்காலம் 400 வருடங்கள் ஆகும். ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டை இடுவதற்காக கடற்கரைக்கு, நடுகடலில் இருந்து வரும்போது கப்பல்களிலும், மீன்பிடி படகு என்ஜின் விசிறியில் அடிபட்டும், […]
