லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சிக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள ஆலாம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இதற்கிடையே ஆலாம்பாளையம் வழியாக கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் […]
