ஸ்பெயினின் வட கிழக்கு பகுதியில் கேட்டா லோனியாவில் ஆலங் கட்டி மழைபெய்ததால் ரோட்டில் நடந்து சென்றவர்கள் பலத்த காயமடைந்தனர். 10 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த மழையால் 50க்கும் அதிகமானோருக்கு எலும்புகள் உடைந்ததாக கூறப்படுகிறது. கற்களைப் போன்று விழுந்த ஆலங்கட்டிகளால் வீடுகளின் மேற்கூரைகள், மின்கேபிள்கள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியது. மேலும் ஆலங் கட்டி விழுந்ததில் ஜிரோனா என்ற 20 மாத குழந்தையின் மண்டை உடைந்தது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சைப் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. […]
