உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த குழந்தை திருநங்கை என்பதால் அதை ஆற்றில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள யமுனா நதியில் குழந்தை ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையின் உடல் நலம் குறித்து மருத்துவமனையின் டாக்டர் கூறும்போது 3 […]
