ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிகொல்லை காடு கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த நிதிஷ் என்பவர் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் நேற்று மதியம் அப்பகுதி வாலிபர்களுடன் சேர்ந்து சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார்கள். இதன் பின்னர் அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். இதில் நிதிஷ் ஆற்றில் மூழ்கினார். […]
