ஐரோப்பா கண்டத்தில் இப்போது பல நாடுகளில் கடும் வறட்சி மற்றும் வெப்பநிலை உயர்வு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. அந்த அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியாவில் பிரஹோவா பகுதி அருகில் தனூப் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால், ஆற்றில் மூழ்கி இருந்த போர்க் கப்பல் ஒன்று வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இது 2ஆம் உலகப்போரின்போது ஜெர்மனி பயன்படுத்தியது என தெரியவந்துள்ளது. […]
