கென்யாவில் திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்து, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 23 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீப தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில், நடந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ள, ஒரு தேவாலயத்தின் பாடகர் குழுவினர், பேருந்தில் பயணித்துள்ளனர். அப்போது, பேருந்து, கிடுய் கவுண்டியில் இருக்கும் என்சியூ ஆற்றின் பாலத்தின் மீது ஓடிக்கொண்டிருந்த வெள்ள […]
