பிரேசிலில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மேட்டோ கிராஸ்சோ என்னும் மாகாணத்தில் பராகுவே ஆறு ஓடுகிறது. இந்த ஆறு தென் அமெரிக்காவில் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றாக காணப்படுகிறது. மேலும் மேட்டோ கிராஸ்சோ பகுதிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பராகுவே ஆற்றில் படகு சவாரி செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 21 சுற்றுலா பயணிகள் […]
