Categories
மாநில செய்திகள்

“ஜெ. மரண அறிக்கை” சசிகலாவை சிக்க வைக்க திட்டமா….? இல்ல உண்மையின் தொகுப்பா…..? திடீர் கேள்விகளால் குழப்பம்…..!!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமியின் விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை போன்றவைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் பல்வேறு விதமான கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. அதோடு அதிமுகவினர் இடையே ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின்படி முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மருத்துவர் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மயக்கத்துக்கு பின்னர் நடந்தவை என்ன? அறிக்கையில் வெளிவந்த தகவல்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முன்பே சிகிச்சை அளித்திருந்தால் மாலை 9.45 மணிக்கு ஜெயலலிதா மயங்கி விழுந்திருக்க மாட்டார், அதை தவிர்த்து இருக்கலாம் எனவும் ஆணையம் சொல்லியிருக்கிறது.இவ்வாறான தவிர்த்து இருக்கக்கூடிய நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ” மரணம் அறிக்கை; கிரிமினல் வழக்காக அரசு எடுக்க வாய்ப்பு – அடுத்தடுத்து பரபரப்பு ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்க்கான இயல்பான முடிவு வந்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன். காரணம் அப்பல்லோ மருத்துவமனையில் சேவை குறைபாடு இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை கூறிவிட்டது. எனவே சேவை குறைபாடு பற்றி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை தரப்படவில்லை ; ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா இறந்த தேதி குறித்து வித்தியாசமான தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்த வந்த டாக்டர் ஜெயலலிதாவுக்கு இறுதி அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளார். ஆனால் அது அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை நடைபெறவில்லை. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும், ஜெயலலிதா அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை,  சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்… “விசாரணை நிறைவு”…. ஆறுமுகசாமி ஆணையம் தகவல்..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா குறித்து மரணம் குறித்த விசாரணையானது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் அப்போலோ மருத்துவர்கள் வாக்குமூலம் சரியாக கொடுக்கவில்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் 2 ஆண்டுகள் இந்த விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் வழக்கு…. மருத்துவர்களிடம் இன்று மீண்டும் விசாரணை….!!!

ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவர்களிடம் மீண்டும் இன்று விசாரணை.  ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இந்த விசாரணையில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், தனியார் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், முன்னாள் அமைச்சர்        சி. விஜயபாஸ்கர் உள்பட 154 பேரிடம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ. கைரேகை வைத்தது எனக்கு தெரியும்….. ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்….!!!

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, ஏறக்குறைய 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதையடுத்து மூன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், 78 கேள்விகள்  ஓ.பி.எஸ்யிடம்  கேட்கப்பட்டுள்ளன. இதை அடுத்து அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் பின்வருமாறு, […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதா மரணம்….. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்…..!!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. அந்த […]

Categories
அரசியல்

ஓபிஎஸ்-க்கு வந்த புதிய சிக்கல்?…. அதிமுகவினர் கடும் அதிர்ச்சி….!!!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேற்று (மார்ச் 8) நடந்த விசாரணையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு தான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதில் அளித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையம் சுமார் 154-க்கும் மேற்பட்டோரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி விட்டது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…. விசாரணையை தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையம்….!!!!

உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து 2 1/2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்குகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து தமிழக அரசு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விசாரணை இன்னும் முடிவடையாததால் தொடர்ந்து ஆணையத்தின் பதவிக் காலமும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு…. அப்போலோ நிர்வாகம்…!!!!

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்கவும் கோரியிருந்தது. அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் விசாரணை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு தொடரும். ஆணையத்தில் இதுவரை அப்பல்லோ மருத்துவர்கள் 56 பேர், […]

Categories
மாநில செய்திகள்

Justin: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கூடுதல் இடம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 500 சதுர அடிக்கு மேல் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழிலகம் வளாகத்தில் கலசமஹாலில் 200 சதுர அடி பரப்பளவில் ஆணையம் தற்போது செயல்பட்டு வருகின்றது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கூடுதல் இடம் ஒதுக்கி தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கூடுதலாக 500 சதுர அடி இட ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்…. ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு 8வது முறையாக காலநீட்டிப்பு..!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றோடு 7வது முறையாக நீடிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கடந்த 22ம் தேதி மேலும் 4 மாதங்களுக்கு அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு… 8வது முறையாக நீட்டிப்பு கேட்டுள்ளது ஆறுமுகசாமி ஆணையம்!!

ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கால நீட்டிப்பு கேட்டு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 8வது முறையாக கால நீட்டிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 7வது முறையாக வழங்கப்பட்ட கால நீட்டிப்பு 24ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 7வது முறையாக நீட்டிப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் காலத்தை 7வது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலரிடம் […]

Categories

Tech |