கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு ஒன்று அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சுமை தூக்கும் பணியாளர்கள் ஒன்று திரண்டு சங்கத் தலைவர் தங்கவேல் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, ஈரோடு குட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிகின்ற சுமைதூக்கும் தொழிலாளர்களின் கூலி ஒப்பந்தம் முடிவு அடைந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது. கூலி உயர்வு வழங்க வேண்டும் […]
