ஆர்.டி.ஒவின் டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்தி நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அதிகாரிகளின் உதவியோடு அதிமுக பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி, பெரியகுளம் சப் கலெக்டர் ரிஷிப் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் அபகரிக்கப்பட்ட 94.65 ஏக்கர் […]
