அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மன்னார்குடி ஆகிய ஊர்களில் 49 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் அதிகமான அதிகாரிகள் இச்சோதனையை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து தி.மு.க அரசு சோதனை நடத்துவதாக அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அ.இ.அ.தி.மு.க-வை அரசியல் […]
