ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான ரவிக்குமாரை கடந்த 6ஆம் தேதி 2 பேர் வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரவிக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி கம்பம் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த வாசித், கம்பம் மெட்டு காலனியில் வசிக்கும் சதாம் உசேன் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். […]
