ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டிவிசிக கட்சி தலைவர் திருமாவளவன் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]
