கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டது அனைவரையும் பாராட்டையும் பெற்றுள்ளது. கடந்தவாரம் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக சில இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் சென்றது. அம்மா நகராட்சியின் மேயரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முடவன்முகள் வார்டில் கவுன்சிலராக […]
