தமிழகத்தில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் குளறுபடி நடந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்கு அமைச்சர் காந்தி கொடுத்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது நெசவாளர்கள் மற்றும் கைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக இலவச வேட்டி மற்றும் சேலை திட்டம் புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. எடப்பாடியார் ஆட்சியில் இருக்கும் போது […]
