தேனி மாவட்டத்தில் கணவன் மனைவி தகராறால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள பூச்சிதேவர் தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐந்து ஆண்டுகள் முன்பு புவனேஸ்வரி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனையடுத்து கணவன் மனைவியிடையே அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதுபோன்ற சண்டைகள் தொடர்ந்து வந்த நிலையில் நேற்று பெரும் வாக்குவாதம் […]
