ஆர்டர்லி முறையை பின்பற்றும் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து முத்து என்ற காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2004 -ஆம் வருடம் நான் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை செய்த […]
