டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் எனப்படும் ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தலா இருமுறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 7 முறையும், சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் ஒரு முறையும் வென்றுள்ளார். தற்போதைய எம்.எல்.ஏ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். ஆர்கே நகர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,62,738 ஆகும். சென்னை பெரு வெள்ளத்தில் தத்தளித்த பகுதிகளில் ஒன்றாக ஆர்கே நகர் இருந்தது.குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் பயன்படுத்த […]
