ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து பல இடங்களில் காவல்துறை உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆர்எஸ்எஸ் தரப்பில் காலையில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால் அந்த மனுக்கான நடைமுறை நாளைக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று […]
