பொதுமக்களுக்கு ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் ஆரோக்கிய வனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மாளிகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் திறந்து வைத்துள்ளார். இது சுமார் 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஆரோக்கிய வனம் மனித வடிவில் மற்றும் யோக முத்திரையில் அமர்ந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரோக்கிய வானத்தில் சுமார் 215 மூலிகைகளும் தாவரங்களையும் கொண்டு பல்வேறு நோய்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. […]
