தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர் தாஸ்(91). இவர் நேற்று வயது மூப்பு காரணமாக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “திருவாரூர் மண்ணில் பிறந்த ஆயிரம் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரை உலகில் தனி முத்திரைப் பதித்த முதுபெரும் வசனகர்த்தா […]
