கொரோனா தடுப்பூசி தயார் செய்யும் ஆய்வுக் கூடத்தை மின்னல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில்உள்ள ரஷிய அறிவியல் அகாடமியின் ஷெமியாகின் அண்ட் ஓவ்சின்னிகோவ் உயிர் வேதியியல் நிறுவனத்தின் ஆய்வுக்கூடம் ஒன்று செயலாற்றி வருகிறது. இந்த ஆய்வுக்கூடத்தில் ரஷிய நாட்டிற்கு தேவையான கொரோனா தொற்று பரிசோதனைக் கருவி உருவாக்கப்பட்டது. தற்போது அங்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலமாக மின்னல் தாக்கியதால் அதன் கூரையின் […]
