ஆரம்ப சுகாதார நிலைய டிரைவரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தபால் தந்தி காலனி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி-ராஜபாளையம் கடற்கரைப் பகுதியில் ரத்தினசாமி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் […]
